தேர்தல் நடத்தை விதி: திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
தேர்தல் நடத்தை விதி: திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் விழுப்புரம் பழைய மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என காவல் நிலையத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனாலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட KKR…, மற்ற அணிகளின் நிலை என்ன??

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், அக்கிராமத்தை சேர்ந்த கேசவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கனவே மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. அதை காரணம் காட்டி கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க்கூடாது. எனவே சட்டத்துக்குட்பட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்.’ என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here