வலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததால் பிரபலமான அனிகா சுரேந்தர், தற்போது பல போட்டோஷூட்டால் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இதுவரையில் இல்லாத விதமாக தோழிகளுடன் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்தர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது உள்ள ஆசையால் திரையுலகில் கால் பதித்துள்ளார். மேலும் அவர் நடிப்புக்கும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதலில் மலையாளத்தில் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்துள்ளார். அந்த படத்தில் இருந்த ஒரு பாடலும் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு தான் அவருக்கு என்னை அறிந்தால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் திரிஷா, அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.

மிகவும் சுட்டி குழந்தையாக இருந்த அனிகாவை மக்களுக்கு பிடித்தும் போனது. அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளும் கிடைத்தது. அவர் ஜெயம் ரவிக்கு தங்கையாக மிருதன் படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் அவருக்கு முக்கியமான ரோலும் கூட. அனைவரும் மிருதன் 2 விற்கும் காத்துக்கொண்டுள்ளனர்.

இப்படி நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அனிகா சுரேந்தர் இப்பொழுது 15 வயது மங்கையாகவே காட்சியளிக்கிறார். மேலும் போட்டோஷூட் நடத்தியே ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் என்றே சொல்லலாம். பலரும் இவரை திட்டினாலும் அடுத்து இவர் எப்பொழுது போட்டோ வெளியிடுவார் என்று காத்திருப்பவரே அதிகம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரின் போட்டோஷூட்டும் எல்லை இல்லாமலேயே போனது என்றே கூறலாம். தற்போது இதுவரை இல்லாத விதமாக தனது தோழிகளுடன் எடுத்த போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இவர் வெளியிட்ட புகைப்படத்திற்காக பலரும் இவரை திட்டி தீர்த்தும் வந்தனர். நடிப்பு திறமையை காட்டினால் போதும் வயதிற்கு ஏற்ற வேலையை செய்யுங்கள் என்றும் கூறி வந்தனர். ஆனால் இதெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளாத அனிகா தொடர்ந்து தனது போட்டோஷூட்டை வெளியிட்டு தான் வந்தார்.

மேலும் இவர் பல படவாய்ப்புகளையும் கைவசம் வைத்துள்ளார். பலரும் இவர் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வருவார் என்றும் கூறுகின்றனர். யார் என்ன தான் சொன்னாலும் அனிகாவின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here