விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை – 19 பேர் அதிரடி கைது!!

0

டெல்லியில் கடந்த குடியரசு தினவிழாவில் வன்முறை ஏற்பட்டது. தற்போது வன்முறை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 19 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டெல்லி:

டெல்லியில் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுவரை அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே சுமார் 12 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. மேலும் கடந்த குடியரசு தினவிழாவில் போது டிராக்டர் மூலம் பேரணி நடத்தி போராடி வந்தனர் விவசாயிகள். அப்போது வன்முறை ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விவசாயிகள் குடியரசு தினவிழாவின் போது செங்கோட்டையில் ஏற்றப்பட்டிருந்த நம் நாட்டின் தேசிய கொடியை இறக்கினர். மேலும் அதற்கு பதில் அந்த கம்பத்தில் பிரிவினைவாத கொடியை ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் விவசாயிகள் போலீசார் மீது கல்வீச்சு அட்டகாசம் செய்தனர். இந்த தாக்குதலினால் 400கும் மேற்பட்ட போலீசார் காயப்பட்டு உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவர் குறித்து பஞ்சாபை சேர்ந்த நடிகர் தீப் சிந்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

19 பேர் அதிரடி கைது:

இவர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு இவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்த்தது. ஆனால் இவர் டிராக்டர் பேரணியின் போது தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்துள்ளார். மேலும் கலவரம் ஏற்பட்டதற்கும், தேசிய கொடியை இறக்கியதற்கும் இவர் தான் காரணம் என்று கூறி போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குடியரசு தின விழாவில் நடந்த கலவரத்தின் பெயரில் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது 25கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

தொடங்கியது 5ஜி சேவை – ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

அதுமட்டுமல்லாமல் டிராக்டர் பேரணியை தலைமை தாங்கிய 37 விவசாய சங்கங்களின் தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர் போலீசார். மேலும் இந்த சம்பவங்கள் குறித்து கைது நடவடிக்கை தொடரும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களும் விவசாயிகளும் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

உருமாறிய கொரானாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – மத்திய குடும்ப நல அமைச்சகம் தகவல்!!

மேலும் இதற்கு அடுத்த மாதம் 20ம் தேதி வரை கால அவகாசத்தையும் கொடுத்துள்ளனர். இதில் வரும் முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடந்த வன்முறை குறித்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் பல சான்றுகளை டெல்லி போலீசார் இணைத்துள்ளனர். மேலும் இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஓர் குழு அமைக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here