சென்னையில் 9 இடங்களுக்கு ‘கொரோனா ரெட் அலெர்ட்’ – மக்களை எச்சரித்த தமிழ்நாடு அரசு..!

0

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுப்பு..!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது வருகிறது.

11 மாவட்டங்களில் வீடு வீடாக சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சளி, இருமல், காய்ச்சல் யாருக்கேனும் உள்ளதா என்ற விவரமும் சேகரிக்கப்பட்டது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்கள்..!

  • சென்னையில் ஏற்கனவே மண்டலம்-8 அண்ணா நகர் டிவிசனில் அரும்பாக்கம், புரசைவாக்கம் பகுதியில் கொரோனா வைரசால் 5 பேர்,
  • மண்டலம்-9 தேனாம்பேட்டை டிவிசனில் சாந்தோம் பகுதியில் ஒரு நபருக்கு,
  • மண்டலம்-10 கோடம்பாக்கம் டிவிசனில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் 5 பேர்,
  • இதைத்தவிர வளசரவாக்கம் மண்டலத்தில் போரூரில் 2 பேர்,
  • ஆலந்தூர் மண்டலம் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கு,

கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால் அப்பகுதி மக்களும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்று வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மேற்கண்ட 9 இடங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் அவர்களது வீடுகளில் இருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் சுகாதாரத்தை பேணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here