நாளை முதல் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் – ரிசர்வ் வங்கி உத்தரவு..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வங்கிகளின் சேவைகளும் குறைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நாளை முதல் வங்கிகள் வழக்கம் போல் முழுநேரம் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

பல்வேறு சலுகைகள்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பலர் வருமானமின்றி தவிக்கின்றனர். அத்தகைய ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நிதியமைச்சர் விவசாயிகளுக்கு 2000 ரூபாய், ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு பணம் வழங்கப்படும் போன்ற பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதைப் பெறுவதற்காகவும், மாத தொடக்கம் என்பதால் சம்பளத்தை எடுக்க மக்கள் அதிகளவில் வருவர் என்பதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் வங்கியின் வேலை நேரம் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரை குறைக்கப்பட்டது. பொது மக்கள் அவசர தேவைக்கு மட்டும் வங்கிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here