தொழிலாளர்களின் EPF தொகையை அரசே செலுத்தும், விவசாயிகளுக்கு ரூ. 2000, இலவச சிலிண்டர் – நிதியமைச்சரின் கொரோனா நடவடிக்கை அறிவிப்புகள்..!

1

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

நிதியமைச்சரின் அறிவிப்புகள்:

  • ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும். யாரும் பசியில் இருக்கக்கூடாது என்பதற்காக அரசு ரூ. 1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி செய்யவுள்ளது.
  • மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவில் காப்பீடு செய்யப்படும்.
  • 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள ஐந்து கோடி பேருக்கு தலா 2000 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள விவசாயிகளில் முதற்கட்டமாக 8 கோடி பேருக்கு 2000 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு இலவசமாக 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.
  • வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெரும் சுமார் 8 கோடி குடும்பங்களுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
  • 80 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும்.
  • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்த வித அடமானம் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்கப்படும்.
  • மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • 100 தொழிலார்களுக்கு கீழ் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தலா 12 சதவீத ஈபிஎப் (EPF) தொகையை மத்திய அரசே அடுத்த 3 மாதங்களுக்கு செலுத்தும்.
  • தொழிலாளர்கள் PF பணத்தில் 75% அல்லது 3 மாத சம்பளம் அதில் எது குறைவோ அதை பெற்றுக்கொள்ளலாம்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here