உலகளவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 75 ஆயிரத்தை நெருங்கும் உயிர்பலி – சீனாவில் 77,000 பேர் குணமடைந்த அதிசயம்..!

0

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் சீனாவில் 77,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்:

  • உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 13,47,235
  • உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 74,767
  • உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 2,86,234

உலக நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவும், அதிக உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.

அமெரிக்கா ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 3,67,629 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 10,941 பேர்

இத்தாலி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 1,32,547 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 16,523 பேர்

ஸ்பெயின் ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 1,36,675 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 13,341 பேர்

ஜெர்மனி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 1,03,375 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 1,810 பேர்

சீனாவின் நிலவரம்:

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவில் இதன் தாக்கம் ஒட்டுமொத்தமாக குறைந்து விட்டது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் 77,000 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சீன அரசு தெரிவித்து உள்ளது.

மீதமுள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் தற்போது வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here