Sunday, May 19, 2024

சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி!!

Must Read

சென்னையில் கொரோனா நோய் தொற்று ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என்று ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று:

மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான மும்பை மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை கணக்கிடுவதற்காக மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி குழு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் சென்னையில் வசிப்பவர்களிடம் கொரோனா நோய் பாதிப்பு குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

கொரோனா பரிசோதனை:

இதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி குழு இணைந்து செயல்பட்டது. இந்த ஆராய்ச்சியில் ஒருவரின் ரத்த மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்படும், பின் சில பரிசோதனைகள் மூலமாக அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று கணக்கிடபடும். இந்த பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே இருந்ததா என்றும் அவர்களது உடல் அதனை எதிர்த்து போராடிவிட்டதா என்பதனையும் கணக்கிடலாம்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

corona test
corona test

தற்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சென்னையில் உள்ள 12,405 பேரில் 21.5 சதவீதம் மக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக ஒரு பகுதியில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆணையர் செய்தி:

இது குறித்து சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததாவது “இந்த பரிசோதனைகள் மூலமாக எந்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.”

இந்த விஷயங்களை செய்தால் வீட்டில் தரித்திரியம் தாண்டவம் ஆடுமாம்!!

corporation commisionar prakash
corporation commisionar prakash

“மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது, இதனால் நோய் பரவல் வேகமும் குறைத்துள்ளது. மக்கள் கவனமாக இருந்தால் இதில் இருந்து சீக்கிரமாக மீண்டு வரலாம்” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது உள்ள நிலவரப்படி சென்னையில் 1,36,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -