பெண்களே இந்த விஷயங்களை மட்டும் வீட்டில் செய்யாதீங்க – தரித்திரியம் தாண்டவம் ஆடுமாம்!!

0
பெண்கள் வீட்டில் செய்ய கூடாதவை
பெண்கள் வீட்டில் செய்ய கூடாதவை

வீட்டில் சில விஷயங்களை செய்வதன் மூலம் தரித்திரியங்கள் ஏற்படுகிறது. நாம் தெரிந்து செய்தாலும் சரி தெரியாமல் செய்தலும் சரி இதனால் பாவகணக்கில் சேரும் என சாஸ்திரம் சொல்கிறது.

வீட்டில் செய்ய கூடாதவை

‘பெண்களே நாட்டின் கண்கள்’ என பலர் கூறுவதுண்டு. தற்போது உள்ள காலத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். எல்லா துறைகளிலும் வெற்றி அடைகின்றனர். ஆனால் வீட்டில் இந்த சில செய்கைகளால் தரித்திரியம் ஏற்பட கூடும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

சாணம் தெளித்து கோலம் போடுவது
சாணம் தெளித்து கோலம் போடுவது

சில விஷயங்கள் ஆன்மீக ரீதியாக இருந்தாலும் முன்னோர்கள் அவற்றை அறிவியல் பூர்வமாக கருதியே கூறியுள்ளனர். சாணம் தெளித்து கோலம் போடுவது போன்றவை எல்லாம் நோய் கிருமிகள் அண்டாமல் இருக்க முன்னோர் காலத்தில் நடைமுறையாக்கப்பட்டது.

விளக்கேற்றுதல்
விளக்கேற்றுதல்
  • வீட்டில் காலையில் எழுந்தவுடன் வாசல் தெளிக்கின்றோம். அப்பொழுது முதலில் கதவு ஜன்னல் ஆகியவற்றை திறந்து வைத்த பின்னரே வாசல் தெளிக்க வேண்டும்.
  • வீட்டில் யாராவது வெளியே செல்லவிருந்தால் அவர்கள் செல்வதற்கு முன்னரே வாசல் தெளித்து கோலமிட வேண்டும். அவர்கள் போன பிறகு வாசல் தெளித்தால் தரித்திரியமே உண்டாகும்.
  • பெண்கள் பொழுது விடியும் முன் எழுந்திரிக்க வேண்டும். எழுந்தவுடன் குளிப்பது நல்லது.
  • குளிக்காமல் அல்லது பல் துலக்காமல் அடுப்பறைக்குள் நுழைவது கூடாது.
  • காபி குடித்த டம்ளரை கழுவி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால் தரித்திரியம் தாண்டவம் ஆடும்.
  • பெண்கள் இருந்தும் ஆண்கள் வீட்டில் விளக்கேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படாது.
  • பெண்கள் அதிக நேரம் தூங்குவது. விளக்கேற்றும் சமயத்தில் வெளியே செல்வது, வெளக்கேற்றியபின் தூங்குவது போன்றவற்றை செய்ய கூடாது.
  • காலை மற்றும் மாலை வேளையில் வீடுகளை கூட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பெண்கள் சூரிய உதயத்திற்கு முன்பே குளித்து விட வேண்டும்.
  • அழுக்கு துணிகளை அதிகமாக போட்டு வைப்பது கூடாது.
  • வேப்பெண்ணைகளில் விளக்குகளை ஏற்ற கூடாது. விளக்கேற்றிய பின் கையில் உள்ள எண்ணெய் பசையை தனியாக ஒரு துணியை கொண்டு துடைக்க வேண்டும். நமது உடையில் துடைக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here