Friday, May 3, 2024

முருங்கை கீரை உட்கொண்டால் கொரோனா வராது – மத்திய மண்டல தலைவர் உரை!!

Must Read

காவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் பேசுகையில் கீரை வகை உணவுகளை உட்கொண்டால் கொரோனா போன்ற வைரஸ் நம்மை தாக்காது என்று அறிவுரை கூறி உள்ளார்.

காவல்துறை பயிற்சி:

திருச்சியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டார். இந்த வகுப்புகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் பங்கேற்று நடத்தினார். இந்த பயிற்சி வகுப்பில் காவல் துறையினருக்கு தற்காப்பு ஜூடோ, கராத்தே போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதே போல் மன வலிமைக்காக யோகாசங்களும் கற்று தரப்பட்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

central zonal police chief jayaram
central zonal police chief jayaram

தலைவர் ஜெயராம் காவலர்கள் ஆர்வத்துடன் பயிற்சிகளை செய்ய உற்சாகப்படுத்தினார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 122 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயிற்சியின் போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் சில மூச்சுப்பயிற்சிகளையும் அனைவருக்கும் செய்து காட்டினார்.

சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்:

அப்போது அவர் பேசியதாவது “காவலர்கள் முக்கியமாக கீரை வகை உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக முருங்கை கீரையினை சாப்பிட்டால் கொரோனா வராது. மைதாவால் செய்யப்படும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

சர்வதேச பட்டினி பட்டியல் – அண்டை நாடுகளை விட பின்தங்கிய இந்தியா!!

“சத்தான உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த பயிற்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -