ஒரே மாதத்தில் உடல் எடையை முற்றிலுமாக குறைக்க வேண்டுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

0
weight loss
weight loss

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே பணியாற்றினர். இதனால் உடலுக்கு ஏற்ற சரியான உழைப்பு இல்லாததால் பலருக்கும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. இதனை ஆரம்பத்திலேயே குறைத்து விட்டால் எந்த பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை.

உடல் பருமன்

வழக்கமாக செய்யப்படும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இந்த கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளது. இதனால் பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. உடல் பருமன் எப்பொழுதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. ஒருவருக்கு சரியான உடல் உழைப்பு இல்லாதபோது 5 கிலோ 10 கிலோ என உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இதய நோய்கள் வர கூட வாய்ப்புள்ளது. மேலும் இந்த உடல் பருமனால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு கூட ஏற்படலாம்.

weight loss
weight loss

மேலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கீரைகள் புரதம் நிறைந்த காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலையில் இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்புகள் மறையும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

weight loss

மேலும் காலையில் எழுந்ததும் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். மேலும் ப்ரோக்கோலியை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் தொப்பையை குறைக்கும் ஆற்றல் ப்ரோகோலிக்கு உள்ளதால் உணவில் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

weight gain tips
weight gain tips

முருங்கை கீரையை சாறு எடுத்து அதனுடன் இஞ்சி எலுமிச்சை சாறை கலந்து குடிக்க வேண்டும். இதனை வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் உடல் எடை குறையும். மேலும் ஆப்பிள் வினிகரை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் அடிக்கடி பசி எடுப்பது தடுக்கும். மேலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்.

weight loss

வெற்றிலையை தேன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும். மேலும் இதனை பின்பற்றும்போது எண்ணெய் பதார்த்தங்கள், கொழுப்புகள் நிறைந்த உணவுகள் துரித உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு செய்து வந்தாலே ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here