வீக் எண்டு ஸ்பெஷல் ‘கிரில் ஃபிஷ்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
lemon butter fish recipes

ஆரோக்கியமான உணவு என்றால் அதில் மீன் வகைகளுக்கு முதலிடம் தரலாம். கடல் உணவான மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், எறும்பு சத்துக்கள் மற்றும் அயோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய உணவு ஆகும். மேலும் கண் பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள் மீனை சாப்பிட்டு வந்தால் கண்ணிற்கு நல்லது. இப்பொழுது மீனை வைத்து புதிய விதமாக ‘கிரில் ஃபிஷ்’ எப்படி செய்து என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 1/2 கி

மைதா மாவு – ஒரு தேக்கரண்டி

சோளமாவு- ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி

வெங்காயம் – 1

பூண்டு – 4

எலுமிச்சை

வெண்ணெய்

செய்முறை

முதலில் மீனில் உள்ள முள்ளை எடுத்து வேண்டும். அதில் உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்து நனவு தடவவும். இப்பொழுது மைதா மாவு மற்றும் சோளமாவை கலந்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும். அந்த மாவில் மீனை பிரட்டி எடுக்கவும்.

grill fish
grill fish

இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் இந்த மீனை போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் அதில் எலுமிச்சை சாறை பிழிந்து விடவும்.

grill fish
grill fish

இப்பொழுது அதில் 3 தேக்கரண்டி வெண்ணெயை சேர்த்து மீனை திருப்பி போடவும். வெண்ணெயுடன் மீன் கலந்து கிரேவி போல வரும். அப்பொழுது அந்த மீன் துண்டுகளை கடாயில் இருந்து எடுத்து அதன் மேல் கடாயில் இருக்கும் கலவையை ஊற்றவும். இப்பொழுது ‘கிரில் ஃபிஷ்’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here