Friday, May 3, 2024

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளில் 70% ஆண்களே – சுகாதாரத்துறை தகவல்!!

Must Read

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இது குறித்த விபரங்களை வெளியிட்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்தது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. நாளுக்கு நாள் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கொரோனா நிலவரம் குறித்து கூறியதாவது “இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக ஆண்கள் தான் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆண்கள்”

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

“வயதானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டால் மீள்வது சிரமமாக உள்ளது. 53 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். 35 சதவீதம் பேர் 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள். 10 சதவீதம் பேர் 26 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்கள். 1 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்”

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் காது கேட்கும் திறனை இழக்க நேரிடலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

“அதே போல் ஒரு சதவீதம் பேர் மட்டுமே 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 73 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்”

இந்தியாவில் தற்போதைய நிலவரம்:

rajesh bhushan
rajesh bhushan

“இவர்களில் 63 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமாகி உள்ளனர். மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பலி ஆகி உள்ளனர்” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -