ஒரே மாதத்தில் அடர்த்தியான தலைமுடிகளை பெற வேண்டுமா??? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!!

0
hair growth tips
hair growth tips

முடி உதிர்தலை தடுக்க நாம் பல முயற்சிகளை மேற்கொண்டும் தீர்வுகள் கிடைப்பதில்லை. ஏனெனில் நமது முடியின் வேர்களுக்கு ஊட்டம் இல்லையெனில் முடி உதிர்வு பிரச்சனைகள் அதிகரிக்க தான் செய்யும். இப்பொழுது முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்க எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

முடி உதிர்வு பிரச்சனைகளை தீர்க்க..

நமது உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், தைராய்டு பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றால் கூட முடி உதிர்வு அதிகம் ஏற்படுகிறது. மேலும் மாறி வரும் சுற்றுச்சூழல் மற்றும் பழக்க வழக்கங்கள் கூட முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது. மேலும் தலையில் அழுக்கு மற்றும் தூசிகள் படிவதால் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். இப்பொழுது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முடி உதிர்வை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.

hair growth tips
hair growth tips
  • முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஆலிவ் ஆயில் மற்றும் தேனை கலந்து தலை முடியின் வேர் வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முடியின் வேர்கள் வலுவடையும். முடி உதிர்வையும் தடுக்கலாம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

  • அதிமதுரம் வேரை எடுத்துக் கொள்ளவும். அதில் குங்குமப்பூ மற்றும் 1 கப் பாலை சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை முடியின் வேர் வரை நன்கு தடவி மசாஜ் செய்து விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும். காலையில் எழுந்து தலைமுடியை ஷாம்பூ அல்லது சிகைக்காய் சேர்த்தோ அலச வேண்டும். இதனால் முடிகளின் வேர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். முடி உதிர்வையும் தடுக்கலாம்.
hair fall problems solution
hair fall problems solution
  • க்ரீன் டீ பாக்கெட்டை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஆறியதும் தலைமுடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 2 தடவை செய்து வர வேண்டும்.
  • ஒரு பௌலில் தயிர், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து இதனை ப்ரஷ் கொண்டு தலைமுடியில் தடவ வேண்டும். மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
hair
  • மேலே குறிப்பிட்டுள்ள இந்த வழிமுறைகளை ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண்டிப்பாக முடி உதிர்வை தவிர்க்கலாம். மேலும் முடியின் வேர்களை வலுவாக்கி அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here