ஒரு மாதம் தள்ளிவைக்காமல் 10ம் வகுப்பு தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்..? அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

0
Chennai High Court
Chennai High Court

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அதனை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

பள்ளிப் பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அட்மிட் செய்ய படுக்கைகள் கூட இல்லாமல் நிரம்பி உள்ளது. இத்தகைய பாதிப்புகளுக்கு மத்தியிலும் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அரசு சார்பில் தெரிவித்து இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி தொடங்கப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள பொழுது 10ம் வகுப்பு தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரின் உடல்நலத்தையும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோன – 2.5 லட்சத்தை தாண்டிய பாதிப்பு..!

அதுமட்டுமின்றி மாணவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல் துறையினர் & வருவாய்த் துறையினர் என தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைவரையும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? என கேட்டு உள்ளனர். ஒரு மாதம் தள்ளிவைத்து தேர்வுகளை நடத்தாமல் ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? என அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here