இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா – 2.5 லட்சத்தை தாண்டிய பாதிப்பு..!

0

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் முதன் முதலில் கண்டறியபட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமெடுத்து வருகிறது. இந்தியாவில் இந்த கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய் 2.5 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களை தொடர்நது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது படிப்படியாக சில தளர்வுகளையும் செயல்படுத்தி வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona death rates
corona death rates

தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. மேலும் குணமடைபவர்களின் என்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 256611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9983 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 206 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7135 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

குணமடைந்தவர்கள்

மேலும் 124095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4802 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 125381 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

75 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு – சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்..!

corona virus cases in india
corona virus cases in india

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தம் 85975 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 31667 பேருக்கும், டெல்லியில் 27654 பேருக்கும், குஜராத்தில் 20070 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here