75 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு – சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்..!

0
temples opening today
temples opening today

கொரோனா வைரஸால் நாடெங்கிலும் மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு இன்று (ஜூன் 8) வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

வழிபாட்டு தலங்கள்

கொரோனாவால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதோடு வழிபட்டு தலங்களும் மூடப்பட்டன. மார்ச் 24 இல் தொடங்கிய இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஜூன் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

temples opening today
temples opening today

மத்திய அரசு ஜூன் 8 இல் வழிபாட்டு தலங்களை திறக்க உத்தரவிட்டிருந்தது. எனவே வழிபாட்டு தலங்கள் இன்று (ஜூன் 8) திறக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளிகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை-திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவில் இன்று வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. இன்றும், நாளையும் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதி திருமலை பாலாஜி நகரில் வசிக்கும் உள்ளூர் மக்கள், திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முக ஸ்டாலின் வலியுறுத்தல்..!

temples opening today
temples opening today

11-ந்தேதி முதல் ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். அந்த வகையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுப்பப்பட உள்ளனர்.

திருமலையில் உள்ள கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தலாம். மேலும் திருமலையில் பொதுமக்கள் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. புதுவை மணக்குள விநாயகர் கோவில், உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் பள்ளிவாசல் என முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இன்று பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் வழிபாடு நடத்திவருகின்றனர். சானிடைசர் மூலம் பக்தர்களின் கைகள் சுத்தம் செய்யப்படுகிறது. உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

temples opening today
temples opening today

இதேபோல் கேரள மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. மாதம் 5 நாட்கள் திறக்கப்படும் சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 14-ந்தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here