தங்கம் விலை இன்னைக்கு குறைஞ்சுருக்கு – நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!

0
Gold
Gold

கொரோனா பாதிப்பு சமயத்தில் தொடர்ந்து விலையேறிக் கொண்டே வந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இதனால் நகை விற்பனை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் அதற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் விலை சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து ரூ. 35,432 விற்பனை செய்யப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை..!

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6 ரூபாய் குறைந்து ரூ. 4,429 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் பெரிதளவில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 47.41 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 47,410 ஆக உள்ளது. மற்ற நகரங்களில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் மும்பையில் ரூ.4,463 ஆகவும், டெல்லியில் ரூ.4,501 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,561 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here