இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை..!

0
Anna University
Anna University

இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் தனது இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த தயாராகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் மாணவர்கள் இறுதியாண்டு படித்து வருகின்றனர். இத்தேர்வுகளை காலவரையின்றி ஒத்திவைக்க முடியாது என்பதால் விரைந்து நடத்தி முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆனால் தேர்வுகளை நடத்தும் பொழுது மாணவர்கள் அதிகளவில் வருவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கியம் என்பதால் அது குறித்து பல்கலை நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் மாற்று யோசனையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஆன்லைனில் தேர்வு நடத்தும் புதிய வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முக ஸ்டாலின் வலியுறுத்தல்..!

ஆன்லைனில் கிராமப்புற மாணவர்கள் தேர்வில் பங்கேற்பது கடினம் என்பதால், அவர்களுக்கு நேரில் தேர்வுகளை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் தேர்வில் 70 சதவீத மாணவர்கள் பங்கேற்கும் வகையில், மீதி 30 சதவீத மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தேர்வுகளை நடத்துவது குறித்து புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here