10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முக ஸ்டாலின் வலியுறுத்தல்..!

0
MK Stalin
MK Stalin

தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்யுமாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பொதுத்தேர்வு ரத்து:

ஆட்சியாளர்கள் தங்களது மறைமுக ஆதாயத்திற்காக மாணவர்களின் உயிருடன் விளையாடுவதாக முக ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார். இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். நாள்தோறும் நோய்த்தொற்று அதிகரித்து வரும் காரணத்தால், பாதிப்பு குறைந்து இயல்பான, பாதுகாப்பான நிலை திரும்பிய உடன் பொதுத்தேர்வை நடத்தலாம் எனவும் கூறியுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

யாரிடம் இருந்து யாருக்கு பரவியது உள்ளிட்ட தொடக்க நிலை, தொற்று அறியப்படாத அளவிற்கு பரவி வருகிறது. தேர்வு நடத்தியே தீருவது என்கிற என்ற வறட்டு பிடிவாத முடிவு, மாணவர் உயிருடன் விளையாடுவது அபாயகரமான ஆட்டம். கொரோனா தொற்று நம்ப முடியாத அளவிற்கு பரவி வருகிறது. நோய் தடுப்பில் பெயில் ஆகியுள்ள அரசு, மாணவர்கள் பாஸ் அல்லது பெயில் ஆகியுள்ளனரா என்பதை அறிய தேர்வு நடத்துகிறது என ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here