இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும்..? வெளியான ஆய்வு முடிவுகள்..!

0
Corona Virus
Corona Virus

உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பொது சுகாதார நிபுணர்கள் கணிதமுறை மாதிரி ஆய்வின் படி கூறியுள்ளனர்.

கொரோனா தொற்று:

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று உலகில் உள்ள பல நாடுகளுக்கும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதனிடையே இந்த தொற்று இந்தியாவையும் தாக்கியது. இதன் பாதிப்பு சதவீதம் அதிகரித்து வரும் நிலையில் எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

ஆய்வறிக்கையில் கூறப்படுவன:

பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், தொற்று மற்றும் குணமடைதல் என்னும் இரண்டு கூறுகளும் உட்படுத்தி, பெருந்தொற்றின் முழு அளவையும், பரவலான தன்மையையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விகிதம் மற்றும் குணமடைந்தவர்களின் விகிதம் ஆகிய இரண்டுக்கு இடையிலான ரிக்ரெஷன் பகுப்பாய்வும் செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக இந்த கூறியுள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொற்றால் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்த எண்ணிக்கையுடன் சரிசமமாகும்போது, அதன் குணகம் (Coefficient) 100 சதவிகித வரம்பை எட்டி, தொற்றுப்பரவல் மறையும் என்று இந்த ஆய்வு தெரிவிப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் தனிமைப்படுத்துதல், பெருந்தொற்று மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சீராக மேற்கொண்டால் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறி உள்ளனர். இந்த ஆய்வு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here