Sunday, May 12, 2024

வங்கி கடனை முறையாக கட்டியவர்களுக்கு ஊக்கத்தொகை – ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு!!

Must Read

பொது முடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 6 மாதங்களில் முறையாக வட்டியினை கட்டியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாச தொகையினை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது முடக்கம்: 

கடத்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் அனைவருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் வங்கிகளில் கடன் பெற்ற நடுத்தர மக்கள் வட்டி மற்றும் கடன் தொகையினை செலுத்த முடியாமல் அவதிபட்டனர். இதனால் மக்களின் அவதியினை புரிந்து கொண்ட மத்திய அரசு 6 மாதங்களுக்கு தவணை காலத்தை நீடித்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது அனைத்து தரப்பு மக்களையும் சற்று நிம்மதி அடைய வைத்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதில் கூறப்பட்டதாவது, ஒத்திவைக்கப்பட்ட தவணை காலத்திற்கான வட்டிக்கு வட்டியினை விதிக்க கூடாது என்பது தான் ஆகும். தற்போது இது குறித்து மேலும் ஒரு அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவு:

அது என்னவென்றால் 2 கோடி ரூபாய் வரையிலான கடனை பெற்று தவணை நீடிப்பினை தேர்வு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடன் தொகைக்கு வட்டி கட்டியவர்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -