Saturday, May 18, 2024

UPSC சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்வது எப்படி??

Must Read

இந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பல எதிர்ப்புகளிடையே நடைபெற்ற இந்த தேர்வின் அடுத்த கட்டமான மெயின் தேர்வுகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

யூபிஎஸ்சி தேர்வுகள்:

இந்தியாவில் உள்ள அரசு உயர் பணியிடங்களான ஆட்சியர், காவல் ஆய்வாளர் போன்ற பணிகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் யூபிஎஸ்சி என்று சொல்லப்படும் சிவில் சர்வீஸ் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும். இந்தியாவில் உள்ள பல பட்டதாரிகளுக்கு இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது வாழ்வியல் லட்சியமாக இருக்கும். இந்த தேர்வுகள் முதன்மை, மெயின் மற்றும் நேர்காணல் என்று மூன்று நிலைகளில் நடைபெறும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஆண்டு 700க்கும் அதிகமான பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதன்மை தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்று ஆண்டின் தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால், கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக தேர்வுகள் செப்டம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தேர்வுகள் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. மேலும் தேர்வுகளை தள்ளி வைக்கவேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், யூபிஎஸ்சி அமைப்பு இதனை திட்டவட்டமாக மறுத்து அக்டோபர் 4 ஆம் தேதி முதன்மை தேர்வுகளை பல எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடத்தியது.

முடிவுகளை எப்படி காண வேண்டும்??

இந்த தேர்வுகளை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் எழுதினர். தற்போது முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகளை யூபிஎஸ்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தான் அடுத்த கட்டமான மெயின் தேர்வுகளை எழுத முடியும். மெயின் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெற்று 19 நாட்கள் ஆன நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • தேர்வு முடிவுகள் பிடிப் (pdf) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு முடிவுகளை அறிய முதலில் அதிரகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/ முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • பின் அதில் இந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் குறிப்பிடப்பட்டிற்கும்.
  • அதனை கிளிக் செய்தால் pdf வெளியாகும்.
  • அதில் தேர்வரின் பதிவு எண் கூறப்பட்டிருக்கும். முடிவுகளை அதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -