பீட்டர் பால விட என் புருஷன் அழகா இருப்பான், 5வதா அனுப்பி வைக்கவா?? வனிதாவை சீண்டிய சூர்யாதேவி!!

0
surya devi

வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது வரையிலும் அமைதியாக இருந்த சூர்யா தேவி தற்போது வனிதா பற்றிய பல உண்மைகளை உடைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

வனிதா பீட்டர் பால்

பிக் பாஸ் பிரபலமான வனிதா லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒரு பக்கம் ஏற்கனவே 2 திருமணம் செய்து இப்பொழுது மூன்றாவது திருமணம் செய்து கொள்வதை எதிர்த்து முறையிட்டனர். மறுபக்கம் பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் முறையாக விவாகரத்து ஆகாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் கஸ்தூரி, ரவீந்தர் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன்  என பலரும் இதற்காக முறையிட்டனர். ஆனால் எதற்கும் வனிதா அஞ்சாமல் அவர்கள் அனைவரையும் விளாசினார். மேலும் மக்கள் பலரும் பீட்டர் பால் நல்லவர் கிடையாது, 2 பெண் குழந்தையை வைத்துக்கொண்டு இந்த மாதிரி செய்வது மிகவும் தவறு என்றும் கூறினர். ஆனால் வனிதாவோ அவர்களை சாக்கடை, அறிவில்லாதவர்கள் என்று கேவலமாக பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது பீட்டர் பால் தனது சுயரூபத்தை வணிதாவிடம் காட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆகியுள்ளது. கோவாவில் குடித்து விட்டு தற்போது எங்கிருக்கிறார் என்று கூட தெரியாது என்று கண்ணீருடன் பேட்டி அளித்திருந்தார் வனிதா. இதற்கு சூர்யா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வனிதா பற்றி கேவலமான சொற்களை உபயோகித்து பேசி இருந்தார்.

surya devi

அதில் அவர் கூறியதாவது, வனிதா வீடியோவில் சொல்வது பாதி பொய். மேலும் பீட்டர் பாலை பற்றி நாங்கள் எவ்வளவு கூறியும் நீ நம்பவில்லை. அவரை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்து விட்டு அவரை பிரேக்கப் செய்து விட்டாய். மேலும் நீ வைக்கும் குங்குமத்திற்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?? எது எடுத்தாலும் இது ஒரு அனுபவம் என்று கூறுகிறாய். இன்னும் எத்தனை அனுபவம் தான் உனக்கு தேவைப்படுகிறது.

அதுவும் குழந்தைகள் முன்னாடி எப்படி இருக்கணும்னு கூட தெரியாம முத்தம் கொடுத்து வீடியோ பண்ண அசிங்கமா இல்லை உனக்கு. இன்னும் எத்தனை குடும்பத்தை சீரழிக்க போற. ஏற்கனவே பீட்டர் பாலோட சேர்த்து நாலு. இப்போ என்ன பலி வாங்கணும்னா சொல்லு என் புருஷனை 5வதா அனுப்பி வைக்கிறேன். பீட்டர் பாலோட என் புருஷன் அழகா இருப்பாரு. என்று வனிதாவை தகாத வார்த்தைகளில் விளாசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here