உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி இல்லை – இதுதான் காரணமா??

0

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று அசத்தினார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே மாதம் 2ம் தேதி நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சியை கைபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நடந்து முடிந்த தேர்தலில் அரசியலில் முதன் முறையாக களம் கண்ட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரச்சாரத்தின் பொழுது உதயநிதி தனது அமைச்சர் பதவி வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

12 மாநிலங்களில் முழு ஊரடங்கு??உயர் மட்ட குழுக்களுடன் பிரதமர் ஆலோசனை!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அவர் கூறியது போல் அவருக்கு அமைச்சர் பதவி தற்போது வழங்கப்படவில்லை. காரணம் அவர் மீண்டும் படங்களில் நடிக்க போகிறாராம். இவர் தற்போது மு.மாறன் இயக்கத்தில் ‛கண்ணை நம்பாதே’, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஹிந்தியின் ‛ஆர்ட்டிக்கிள் 15′ படத்தின் தமிழ் ரீ-மேக் படம் மற்றும் புதுமுக இயக்குநர் ஒருவரிடம் கதை கேட்டு, ஓகே சொல்லி கால்ஷீட் தராமல் உள்ளார். இதன் காரணமாக தான் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here