Sunday, April 28, 2024

செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பெயர் நிரந்தரமாக நீக்கம் – அண்ணா பல்கலை எச்சரிக்கை!!

Must Read

கல்லூரி கட்டணம் செலுத்ததாக மாணவர்களின் பெயர்கள் நிரந்தரமாக பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில மாதங்களாக கொரோனா தமிழகத்தை அதிகமாக பாதித்து வருகிறது. இதனால், தற்போது வரை எந்த கல்லுரிகளும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் மாணவர்களுக்கு நடத்தபட்டுவருகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

anna university
anna university

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வரவிருக்கும் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது. இதுவே மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் புதிதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் தகவல்:

இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது “மாணவர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் முழு கட்டணத்தையும் கட்ட வேண்டும் என்றும், அப்படி கட்டாதவர்கள் பெயர்களை நிரந்தரமாக நீக்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும் என்றும், வரும் 7 ஆம் தேதி அன்று நீக்கப்பட்டவர்களின் பெயர்களை கொண்ட பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அதிர்ச்சி:

இந்த அறிக்கை மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

எஸ்.பி.பி.,க்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை – மகன் எஸ்.பி.சரண் தகவல்!!

அரசு தற்போது தான் கட்டணத்தை நிர்பந்தித்து பெறக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகம் இவ்வாறு அறிவித்துள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -