Saturday, May 11, 2024

பழைய தங்கத்தை விற்கும் போது ஜி.எஸ்.டி வரி – நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு!!

Must Read

பழைய தங்கத்தை விற்கும் போது 3% ஜி.எஸ்.டி வரி விதிக்க ஒருமித்த கருத்தாக நிதியமைச்சர்கள் கூடிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பழைய தங்கம்:

ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்பது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக பல குழப்பங்கள் பல துறைகளில் ஏற்பட்டது. அதில் ஒன்று தான் தங்க துறை. வரி ஏய்ப்பு போன்ற காரணங்களால் பழைய தங்கத்தை விற்கும் போது ஜி.எஸ்.டி வரி எவ்வளவு விதிக்க வேண்டும் என்று குழப்பங்கள் இருந்து வந்தன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

gst for old gold
gst for old gold

சில ஆண்டுகளாகவே பல ஆலோசனைகளும் கருத்துக்களும் கூறப்பட்டு வந்தன. அதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்கள் ஒருமித்த கருத்தாக பழைய தங்க நகையை விற்பனை செய்யும் போது 3% ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஒரு 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விற்கும் போது வரியாக 3000 ரூபாய் எடுக்கப்பட்டு, 97,000 பெற முடியும். வரி ஏய்ப்பை தடுக்க இது சிறந்த வழியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வேறு சில முடிவுகள்:

இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஒருமித்த கருத்தாக இதனை ஏற்றுக்கொண்டனர். மேலும், கூடுதலாக, மாநிலங்களுக்கு இடையே தங்கத்தை எடுத்து செல்லும் போது மின்னணு ரசீது கட்டாயம் பெற வேண்டும் என்று கூறப்பட்டது.

செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பெயர் நிரந்தரமாக நீக்கம் – அண்ணா பல்கலை எச்சரிக்கை!!

Gold, jewellery sector badly disappointed by Union Budget

ஆனால், அதனை பீகார் மற்றும் குஜராத் மாநில நிதியமைச்சர் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று மறுத்து விட்டனர். தங்கத்தை விற்பவர் ஜி.எஸ்.டி வரியை வசூலித்து அதனை அரசுக்கு முறையாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 11) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -