Monday, April 29, 2024

வேற லெவல்.., வெளிநாட்டு அழகியாக மாறிய “குட்டி நயன்தாரா” அனிகா – வர்ணிக்கும் ரசிகர்கள்!!

Must Read

16 வயதான அனிகா தனது வயதிற்கும், அழகிற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்து வருகிறார். தற்போது பெரிய நடிகைகளுக்கு போட்டி போடும் விதமாக ஒரு போட்டோ சூட் நடத்தி அனைவரையும் வாய் அடைக்க வைத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம் அனிகா:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, திரைத்துறையில் கலக்கியவர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் “தல” அஜித் படத்தில் அறிமுகமாகி 16 வயதில் அனைத்து பெரிய நடிகைகளுக்கும் போட்டியாக உள்ளார், குட்டி நடிகை அனிகா.

அவர் அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதற்கு பின்பு, சில குறும்படங்களில் கூட நடித்தார். அவர் நடித்த “மா” என்ற குறும்படம் பலர் மத்தியில் எதிர்ப்புகளையும், கண்டனங்களை சந்தித்தாலும் வெற்றி அடைந்து பேசப்பட்டது.

இதற்கு பின்பு மீண்டும் அஜித்தின் “விஸ்வாசம்” படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அதில் தந்தையின் அன்பிற்காக ஏங்கும் மகளாக நடித்திருப்பார். இதனால் அவரை அனைவரும் அஜித் மகள் என்றே அழைப்பர். பொது முடக்கத்தின் போது அவர் ஆளே மாறி விட்டார்.

பொது முடக்கத்தில் பெரிய பெரிய நடிகைகள் தான் போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூகவலைத்தளங்களின் பதிவிட்டு வந்தனர். அவர்களுக்கு போட்டியாக அனிகாவும் தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

ஆரம்பத்தில், சேலை கட்டி பெரிய பெண் போல புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு வந்தார். அதற்கு அடுத்ததாக சற்று கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் அனைவரும் அஜித் படத்தில் பார்த்த சின்ன பெண்ணா இவர்? ஆச்சிரியம் அடைந்தனர்.

தற்போது தனது உடை அலங்காரம் மற்றும் ஸ்டைலை மாற்றி வெளிநாட்டு பெண் போல் உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தனது தோழிகளுடன் கூடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்த அனைத்து புகைப்படங்களில் டால் போல உள்ளதாக ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். சமீபத்தில் தான் அனிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -