தமிழக சட்டமன்ற தேர்தல் – தொகுதி பங்கீடு குறித்து அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சு வார்த்தை!!

0
சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கட்சி பெரிய கூட்டணியுடன் களமிறங்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி கூட்டணியுடன் பாஜக, பாமக மற்றும் தேமுதிக என பெரிய கூட்டணிகள் ஒன்றாக தேர்தல் களத்தில் இறங்க உள்ளது. தற்போது அதிமுக கட்சி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வருகிறது. இதில் பெரிய பிரச்சனைகள் நிலவியத்திற்கு பின்பு தான் தொகுதிகள் பிரிக்கப்படுவது போல் தெரிகிறது.
முடிவாக பாஜக கட்சிக்கு 20 தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பிரித்து கொடுத்தது. இதேபோல் பாமக கட்சிக்கு வன்னியர்கள் ஒதுக்கீடு அறிவிப்பை முன்னிறுத்தி 23 தொகுதிகளை பிரித்து கொடுத்தது. தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கூட்டணி பங்கீட்டில் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. இதனால் இவர்களது பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருந்து வருகிறது. மேலும் தேமுதிக கட்சி பாமகவிற்கு நிகராக தொகுதிகளை கேட்பது போல் தெரிகிறது.
முடிவாக அதிமுக கட்சி தேமுதிகவிற்கு 15 தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களை இடத்தை தருவதாக கூறியது. இதற்கு தேமுதிக சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்த இரு கட்சியினருக்கு இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here