அதிமுக.,வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

1

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில் அதிமுகாவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். அதே போல் அதிமுக கட்சியில் டிடிவி தினகரனின் கட்சியான அமமுக கட்சி இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல்

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தில் இன்னும் எந்த கட்சியும் தங்களது கூட்டணி கட்சி குறித்து கூறவில்லை. அதே போல் இந்த தேர்தல் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆளும் கட்சியான அதிமுகாவில் பல கோஷ்டி பூசல்கள் ஏற்பட்டு வருகின்றது.

தளபதி 65 இல் விஜய் உடன் ஜோடி சேரும் நடிகை இவர் தானா?? கொண்டாட்டத்தின் ரசிகர்கள்!!

முதலில், முதல்வர் வேட்பாளருக்கு அந்த கட்சியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் மிகவும் குழம்பி போய் இருந்தனர். இது மட்டும் அல்லாமல் அதிமுகவிருக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தற்போது தான் இவை அனைத்தும் சரி ஆகி அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர். இப்படியான சூழலில் சசிகலா வரும் பிப்ரவரி மாதம் சிறை தண்டனை முடிந்து வெளி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சசிகலா பற்றியெல்லாம் கவலையில்லை... நாங்கள் எம்ஜிஆர் வழி நடப்பவர்கள் - அமைச்சர் ஜெயக்குமார் | The party and the government should be without the family intervention of Sasikala ...

இது அந்த கட்சியினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நிருபர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது “சசிகலாவை அதிமுகாவில் சேர்ப்பதற்கான எண்ணம் இல்லை. அவரை சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. அதே போல் டிடிவி தினகரனின் கட்சியான அமமுக கட்சி இணைவதற்கான வாய்ப்பே இல்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா தற்போது குணம் அடைந்து வருவதாகவும், கூடிய விரைவில் அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here