தளபதி 65 இல் விஜய் உடன் ஜோடி சேரும் நடிகை இவர் தானா?? கொண்டாட்டத்தின் ரசிகர்கள்!!

0

நடிகர் விஜய் நடிக்கும் 65 வது படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் கதாநாயகி யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்திற்கு பின்பு விஜய் எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படக்குழு தரப்பிலிருந்து விஜயின் 65 வது படத்தை இயக்கப்போவது ‘கோலமாவு கோகிலா’ என்ற வெற்றி படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் என அறிவிப்புகள் வந்தது. மேலும் இப்படத்தின் தயாரிப்பை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தின் மற்ற கலைஞர்கள் யாரும் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருவது நடிகை ரஷ்மிகா மந்தனா என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னட மொழியை தாய் மொழியாக கொண்டவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் இவர் தான் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்த சசிகலா – விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!!

தளபதியின் தீவிர ரசிகையான இவருக்கு தளபதியுடன் ஜோடி சேர வேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருந்து வந்தது. தளபதியின் ‘மாஸ்டர்’ படத்தில் இவர் தான் நாயகி என்று பேச்சுக்கள் அடிபட்டு வந்தது ஆனால் அந்த படத்தில் மாளவிகா நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தளபதி 65 ல் நடிகை பூஜா ஹெக்டே தான் நாயகி என்று ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் வேலைகள் ஆரம்பமாக உள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here