இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் கங்கனா ரணாவத் – அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

தற்போது நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி குறித்து திரைப்படத்தை இயக்கவுள்ளனர். இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கங்கனா ரணாவத்:

தற்போது சினிமா உலகில் தனது வாழ்க்கையில் சாதித்தவர்களின் வாழக்கையை படமாக்கி வருகின்றனர். இது தான் தற்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்டாக இருந்து வருகிறது. இதில் விளையாட்டு துறை அரசியல் துறை என அனைத்து துறைகளிலும் சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகின்றனர். சமீபத்தில் மறைந்த முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சரான ஜெயலலிதாவை மையமாக வைத்து ஓர் திரைப்படம் இயக்கப்பட்டது. அதில் கங்கனா ரணாவத் ஜெயலிலதாவாக நடித்தார். எம்ஜிஆர் ஆக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதே வரிசையில் மற்றொரு அரசியில் தலைவரான மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியை மையமாக்கி ஓர் படத்தை இயக்கவுள்ளனர். இது இந்திரா காந்தியின் வாழ்கை வரலாற்று படம் அல்ல. ஆனால் அவரின் அரசியல் வாழ்கை குறித்து எடுக்கப்படவுள்ளது. இந்த படத்தில் பல முக்கியமா நடிகர்கள் நடிக்க உள்ளனர். இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கேஜிஎப் 2 திரைப்படம் ஜூலையில் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!!

இதுகுறித்து பேசிய கங்கனா ரணாவத், ‘அரசியல் தலைவர்களின் வேடத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. அதற்காக நான் ஆர்வமாக உள்ளேன். தற்போது இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான கதை மற்றும் திரைக்கதையின் உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு புத்தகத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here