கேஜிஎப் 2 திரைப்படம் ஜூலையில் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!!

0

தற்போது சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் கேஜிஎப் 2 திரைப்படம் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பல சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த படம் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.

கேஜிஎப் 2:

கடந்த 2018ம் ஆண்டு கன்னட மொழியில் கேஜிஎப் திரைப்படம் வெளியானது. இந்த படம் கன்னட மொழியில் பல சாதனைகளை படைத்தது. அதனால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்ற படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் மொழி மாற்றபட்டு இந்த திரைப்படம் வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் பிரம்மாண்ட சாதனையை படைத்தது. அதேபோல் வசூலிலும் சாதனை படைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தின் முதல் பாகத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் 2 வது பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் படபிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2 வது பாகத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் மற்றும் ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் கதாநாயகன் யாஷின் பிறந்த நாள் கடந்த 8ம் தேதி முடிந்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎப் 2 படத்தின் டீஸர் வெளியானது.

வெளியாகும் தேதி அறிவிப்பு:

அந்த டீஸர் ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ் தாண்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை பல சாதனைகளையும் படைத்து வருகிறது கேஜிஎப் 2 படத்தின் டீஸர். நேற்று படக்குழுவினர் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அது என்னவென்றால் ‘நாங்கள் கொடுத்த வாக்கை காப்பாத்துவோம், இன்று மாலை 6.32 மணிக்கு ஓர் முக்கியமான அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்திருந்தனர்.

‘போஸ்கோ சட்டத்தால் டீன் ஏஜ் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது’ – நீதிபதி கருத்து!!

அதன் படி நேற்று மாலை வெளியான அறிக்கையில் கேஜிஎப் 2 படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 16ம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதனால் கேஜிஎப் படத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here