தமிழக சட்டமன்ற தேர்தல் – பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கீடு!!

0

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகின்ற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு ஒதுக்கீடு என்று செம பிசியாக இருந்து வருகிறார்கள். இவர்களை போல் தேர்தல் அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது என்றும் அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளனர். அதிமுக கட்சி சார்பாக போட்டியிடப்படும் வேட்பாளர்களின் பெர்யகள் நேற்று வெளிவந்தது. அடுத்தகட்டமாக அதிமுக கட்சி கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் அறிவித்துவிட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – விருப்ப மனுவை தாக்கல் செய்த விஜய் வசந்த்!!

இந்நிலையில் அதிமுக தற்போது பாஜகவிற்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மேலும் அவர்கள் கேட்ட தொகுதிகளை அவர்களுக்கு பிரித்துள்ளனர். தற்போது இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும் கன்னியாகுமரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான பாமாவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here