பெண் காவலர்களுக்கு மகளிர் தினத்தன்று விடுமுறை – ஆந்திரா அரசு அதிரடி!!

0

உலக மகளிர் தினம் வருகிற மார்ச் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது இந்த தினத்தில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

உலக மகளிர் தினம்:

ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற திங்கள் கிழமை அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தற்போது அந்த தினத்தில் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆந்திர அரசு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. இதனை ஆந்திர முதலமைச்சார் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது, இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக மகளிர் தினத்தன்று பெண் காவலர்கள் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் இயங்கும் போன் கடைகளில் பெண்கள் தினத்தன்று பெண்கள் போன் வாங்கினால் அவர்களுக்கு 10% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் பேசிய அவர், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திஷா செயலி செயல்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அந்த செயலியில் பாதுகாப்பான இடங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் என தேவைப்படும் அனைத்து தகவலும் இடம் பெற்றுள்ளது. மேலும் திஷா செயலியின் முக்கியத்துவத்தை அனைவரும் கண்டிப்பான முறையில் அறிய வேண்டும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் குறித்த குறும்பட போட்டிகளும் நடைபெறவுள்ளது. மேலும் மகளிர் தினத்தன்று மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணியும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதார பரிசோதனையும் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here