மீண்டும் பரவ தொடங்கும் பறவை காய்ச்சல் – பீதியடையும் மக்கள்!!

0

வடமாநிலங்களில் தற்போது மீண்டும் பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பறவை காய்ச்சல்:

கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி மக்களை கடுமையான வகையில் பாதித்தது. தற்போது வரை அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா தாக்கம் இருந்து வருகிறது. இதுவரை ஓர் உலக நாடு கூட கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியது. குறிப்பாக கேரளாவில் அதிகமான அளவில் பரவியது. தற்போது மீண்டும் வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அஹமதாபாத் சோலா பகுதியில் கோழிகள் திடிரென்று இறந்து கிடந்துள்ளது. இதனால் பறவை காய்ச்சல் மீண்டும் வந்துள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் அளவில் முட்டை, கோழிகளை விற்க தடை விதித்துள்ளனர். இதேபோல் பஞ்சாபிலும் 8 காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் கடந்த 3ம் தேதி 75 கோழிகள் மற்றும் 4 காகங்கள் இறந்து கிடந்துள்ளது.

பிளாட்பாரம் டிக்கட்டின் விலை அதிகரிப்பு – ரயில்வே விளக்கம்!!

தற்போது அந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மகாராஷ்டிரா கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில், பாதிப்பு ஏற்பட்டுள்ள கோழி பண்ணைகளில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் கோழி, கோழிகளின் தீவனம், முட்டை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 10,65,847 கோழி பறவைகள், 83,694 கிலோ கோழி தீவனங்கள் மற்றும் 60,75,791 முட்டைகள் அழிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here