Saturday, May 4, 2024

விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள்? அமைச்சர் குற்றச்சாட்டு!!

Must Read

டெல்லியில் 17-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவசாயிகளின் போராட்டக்களத்திற்குள் சமூக விரோத சக்திகள் நுழைந்துள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டியுள்ளார்.

முடிவுக்கு வாராத போராட்டம்:

மத்திய அரசு வெளியிட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லியில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து 6 முறை மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனது. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தயாராக இருந்தாலும் விவசாயிகளின் கோரிக்கை, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாகவே உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில்,”விவசாயிகள் மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். 3 வேளாண் சட்டங்களில் திருத்தும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ள நிலையில் விவசயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் இருப்பது, விவசாய குழுவிற்குள் சமூக விரோதிகள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். உங்களது போராட்டத்திற்கும் சமூக விரோதிகளை நுழைய விடாதீர்கள் எனவும் இடது சாரிகளின் தூண்டுதலுக்கு ஆளாகாதீர்கள். இது அமைதியான போராட்டத்தை திசை மாற்றிவிடும் என்று கூறினார்.

இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் – சென்னை கமிஷனர்!!

ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து பேசிய கிர்த்தி கிசான் சங்கத்தின் தலைவர் ரமிந்தர் சிங் பாடியால் கூறுகையில்,”அரசு குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம். எங்களை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியாக அரசு செயல்படுகிறது. எங்களின் அனைத்து முடிவுகளும் சம்யுக்த் கிசான் சங்கத்தின் மூலம் தான் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -