பண்டிகை கால சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
ரயில்களில் இனி இதெல்லாம் வரப்போகுது...சர்ப்ரைஸ் கொடுத்த நிர்வாகம் - குஷியில் பயணிகள்!!
ரயில்களில் இனி இதெல்லாம் வரப்போகுது...சர்ப்ரைஸ் கொடுத்த நிர்வாகம் - குஷியில் பயணிகள்!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள்:

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் 24-ம் தேதி அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத சாதாரண டிக்கெட்கள் வழங்கப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என அடுக்கடுக்காக பண்டிகை நாட்கள் வரிசையில் இருப்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. தற்போது உள்ள சிறப்பு ரயில்களில் இடங்கள் நிரம்பியுள்ள நிலையில் கூடுதலாக 7 ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 14-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தினசரி இரவு 9.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் செல்கிறது. மறுபக்கம் மைசூரில் இருந்து வருகிற 15-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேருகிறது.

TNPSC பணிநியமனங்களில் 20% இடஒதுக்கீடு – புதிய மசோதா தெரிவிப்பது என்ன??

திருநெல்வேலியில் இருந்து நாளை 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரண்டாம் நாள் இரவு 9.35 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சென்றடையும். மறுபுறம் பிலாஸ்பூரில் இருந்து வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 3.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

திருநெல்வேலியில் இருந்து வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு இரண்டாம் நாள் பிற்பகல் 3 மணிக்கு மும்பை தாதரை சென்றடையும். மறுபுறமாக தாதரில் இருந்து வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இது தவிர மங்களூர் சென்ட்ரல்-மும்பை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here