Friday, April 26, 2024

இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் – சென்னை கமிஷனர்!!

Must Read

இன்னும் இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார். கூடுதலாக, சென்னை குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான உணவு பொட்டலங்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்தது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் குறைந்து விட்டது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

வனிதாவும், பீட்டர் பாலும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

அவர் பேசுகையில், “பொது மக்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து முகக்கவசங்களை அணிய வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் பரிசோதனைகள் சென்னையில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. கூடிய விரைவில், 25 லட்சம் பரிசோதனைகள் சென்னையில் செய்யப்பட்டு விடும். கொரோனாவிற்கான தடுப்பூசிகளை சுகாதார துறை பணியாளர்களுக்கு வழங்க பட்டியல் தயார் செய்யபட்டு வருகின்றது”

ஆணையாளர் விளக்கம்:

“இந்த ஆண்டு சென்னையில் வழக்கத்தை விட 60 சதவீதம் கனமழை பதிவாகியுள்ளது. கடந்த வருடங்களை விட இந்த ஆண்டு மழை தேக்கம் குறைவாக தான் உள்ளது. சென்னை குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு தினம்தோறும் 1 கோடி 50 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்னையில் 21 இடங்களில் தான் மழைநீர் அதிகமாக தேங்குகின்றது”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“அதனை அதிகாரிகள் சவாலாக எடுத்துக் கொண்டு சரி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மழைநீர் இப்படி தேங்குவதை தடுக்க புதிதாக 5 கால்வாய்கள் பள்ளிக்கரணை பகுதிகளில் கட்டப்பட உள்ளன. 340 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கால்வாய்கள் கட்டப்பட உள்ளன. கால்வாய்கள் கட்டப்பட்டு விட்டால் நிரந்தரமாக மழைநீர் தேங்கி விடுவதை தவிர்த்து விடலாம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -