Sunday, May 5, 2024

பசுக்களை கொன்றால் ரூ.5 லட்சம் அபராதம், 7 ஆண்டுகள் சிறை – புதிய சட்டம் நிறைவேற்றம்!!

Must Read

பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சியினை கடத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என்று கர்நாடகா மாநில அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றியதற்காக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

பசு வதை:

கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகின்றது. நேற்று இரவு கர்நாடகா மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்காக காங்கிரஸ் உட்பட கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த சட்டம் பசுக்களை கொல்வதை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று கால்நடை அமைச்சர் பிரபு சவால் சட்டசபை வளாகத்திற்குள் கோ பூஜை செய்து, இந்த சட்டத்தினை நிறைவேற்றினார். இனி இந்த சட்டம் மூலமாக மாநிலத்தில் உள்ளவர்கள் யாரேனும் பசுக்களை கொன்றால், மாட்டிறைச்சியை கடத்தினால், அதே போல் பசுக்களை சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்பட்டால் அரசு சார்பில் ரூ.50, 000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும்.

மீண்டும் அதிரடியாக குறைந்துள்ள தங்க விலை – இன்றைய மாலை நிலவரம்!!

தொடர்ச்சியாக இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடத்தல், விற்பனையை ஊக்குவிப்பவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இதோடு மட்டும் அல்லாமல், இந்து போன்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமையாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -