Friday, April 26, 2024

மீண்டும் அதிரடியாக குறைந்துள்ள தங்க விலை – இன்றைய மாலை நிலவரம்!!

Must Read

இன்று காலை அதிரடியாக குறைந்த தங்க விலை இன்று மாலை நிலவரத்தில் மீண்டும் குறைந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், அதற்கு தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் நகை கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

தொடர்ச்சியான விலை ஏற்றம்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நாட்டில் பங்கு சந்தை நிலவரம் என்றும் இல்லாத அளவு சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களின் தொழில் நலன் கருதி தங்கத்தில் முதலீடு செய்தனர். இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து விலை நிலவரம் உச்சத்தை அடைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிறிது நாட்களில் இயல்பு நிலை திரும்பியும் தங்க விலை அதே போல் உயர்ந்து கொண்டே தான் வந்தது. அதிரடி உச்சமாக ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்திற்கும் விற்றது. இதனால் மக்கள் கவலை அடைந்தனர். படிப்படியாக தற்போது தங்க விலை குறைந்துள்ளது. தங்க விலை குறைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகின்றது. இன்று காலை கூட சவரனுக்கு 300 ரூபாய் அளவில் குறைந்தது. தற்போது மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம்:

தற்போது மாலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 496 ரூபாய் குறைந்து ரூ.36,976 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு கிராம் தங்கம் 62 ரூபாய் குறைந்து ரூ.4,622 என்ற விலையில் விற்கப்படுகிறது.

தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி – மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை!!

இது இப்படி என்றால் வெள்ளி விலையும் காலை நிலவரத்தை விட குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.66.80 என்று விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,800 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -