Monday, May 6, 2024

தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி – மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை!!

Must Read

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முகேஷ் அம்பானி:

இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக திகழ்பவர் தான், முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் தனியார் குழுமத்தின் தலைவர் ஆவர். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். இவரது மகன் ஆகாஷ் அம்பானி. அவர் தனது தந்தையின் நிறுவனங்களை கவனித்து வருகின்றார். அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஷோல்கா மேத்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலகினர் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஆகாஷ் அம்பானியின் மனைவி கர்ப்பமானார். இதனை குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

முன்னாள் கால்பந்து வீரரான பவுலா ரோஸி மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

அவருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆகாஷ் அம்பானிக்கு குழந்தை பிறந்துள்ளதால் முகேஷ் மற்றும் நீட்டா அம்பானி தம்பதியர் தாத்தா, பாட்டி ஆகியுள்ளனர். இந்த செய்தியினை அம்பானி செய்தி தொடர்பாளர் குழு உறுதி செய்துள்ளது. தற்போது அம்பானி குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -