Friday, April 26, 2024

முன்னாள் கால்பந்து வீரரான பவுலா ரோஸி மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

இத்தாலியின் பிரபலமான முன்னாள் கால்பந்து வீரரான பவுலா ரோஸி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியினை அவரது மனைவி தனது சமூக வலைதளபக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கால்பந்து வீரர்:

இந்தியாவில் உள்ள மக்களுக்கு கிரிக்கெட் மீது எப்படி ஒரு பற்று உள்ளதோ அதே போல் தான் மேல்நாட்டு மக்களுக்கு கால்பந்து என்றால் பிரியம். அப்படி ஆரம்ப கால 80களில் கால்பந்து துறையினை கலக்கியவர், பவுலா ரோஸி. 1954 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த இவர் தனது சிறு வயது முதலே கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். பின், தனது கடின உழைப்பு காரணமாக இத்தாலி கால்பந்து அணியில் சேர்ந்து விளையாடினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

1982 ஆம் ஆண்டு கால்பந்து உலக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 6 கோல்களை அபாரமாக அடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டவர். அதே போல் வைசென்ஸா மற்றும் மிலன் உள்ளிட்ட அணிகளுக்காக சிறப்பாக விளையாடி அதிக கோல்களை பெற்று தந்தவர்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா?? – மத்திய அமைச்சர் விளக்கம்!!

64 வயதான அவர் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவினால் அவதிபட்டு வந்தார். அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியினை அவரது மனைவி ஃபெடரிக்கா தனது சமூகவலைத்தளபக்கத்தில் தெரிவித்தார். அவரது மறைவிற்கான காரணத்தை ஃபெடரிக்கா தெரிவிக்கவில்லை. கால்பந்து போட்டிகளில் இத்தாலி ஜெர்மனிக்கு எதிராக போட்டியிட்ட போது இவர் தொடர்ச்சியாக 3 கோல்களை அடித்தது தான் இன்று வரை சிறப்பாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs SRH 2024: மைதானம் சுழற்ப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் சென்னை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -