இந்தியாவில் பாம்பு கடித்து 12 லட்சம் பேர் பலி – கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்!!

0

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் இந்தியாவில் 2000 முதல் 2019 ஆண்டு வரை உள்ள கணக்கெடுப்பின்படி பாம்பு கடித்து சுமார் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாம்பு கடித்து பலி:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் 1.25 லட்சம் பேர் வரை பாம்பு கடியால் இறக்கின்றனர். பாம்புக்கடியை உலகளவில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய சுகாதார பிரச்சனையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 81,000 முதல் 1,38,000 பேர் இறக்கின்றனர். அவற்றில் பாதி மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உடல் பாகங்களை இழத்தல், கண் பார்வை இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் பாம்புக்கடியால் ஏற்படுகிறது.மக்கள்தொகை அதிகம் உள்ள சாகாரா பாலைவனத்துக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகள், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் பாம்புக்கடிகள் அதிகம் நிகழ்கின்றன.

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பாம்புக்கடி பாதிப்பு உண்டாகும்போது போதிய நச்சு முறிவு மருந்துகள் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுகிறார்கள்.நிலையான நச்சுப்பற்கள் உடைய பாம்புகள் கடிக்கும்போது அது நரம்பு மண்டலத்தை பாதித்து மூச்சுக்கோளாறு உண்டாக்கும். தோலின் தசைகளை தாக்கும் இத்தகைய பாம்புக்கடிகள் உடலின் உள்ளேயே ரத்தக்கசிவு ஏற்படுத்தும் தன்மை உடையவை.

‘ஹேமந்த் சரியான பொம்பள பொருக்கி, பழகாத பொண்ணுங்க கிடையாது’ – பிரபல சீரியல் நடிகை பகீர் பேட்டி!!

இதுகுறித்து குளோபல் ஹெல்த் டொராண்டோ மையத்தின் இயக்குனர் பிரபாத் ஜா வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் அனைத்து இறப்புகளும், பாம்பு கடித்த வழக்குகளாக பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில், இந்தியாவில் அதற்காக தீவிர சிகிச்சை வசதிகள் இல்லை. குறிப்பிட்ட சில இடங்களில்தான் வசதிகள் உள்ளன. பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் சிகிச்சை கிடைக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டில் இந்தியாவில் பாம்பு கடியால் 45,900 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு, 52 ஆயிரம் பேர் பலியாகினர்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மைசூர் பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் கெம்பியா கெம்பராஜு கூறுகையில், “நாட்டில் பாம்பு கடித்த சம்பவ தடுப்பு நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில், இது ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பிரச்னை என்பதேயாகும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here