பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை – மாநில அரசு ஒப்புதல்!!

0
gang raped
gang raped

நாட்டையே உலுக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து வருவதால் அத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மரண தண்டனை சட்டம்:

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலக அளவில் அதிகரித்து வருகிறது. உலகளவில், கடந்த ஆண்டு மரண தண்டனைகளின் எண்ணிக்கை மிகக் குறைந்து உள்ளதாக மனித உரிமைகள் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் 2015ம் ஆண்டு முதல் எந்தவொரு மரண தண்டனையும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இந்திய நீதிமன்றங்கள் மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து – முன்பதிவு துவக்கம்!!

அந்தவகையில் மஹாராஷ்டிரா அரசு பாலியல் குற்றங்களுக்கு எதிராக “சக்தி எனப்படும் புதிய மசோதாவை உருவாகியுள்ளது. இந்த மசோதாவின்படி பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் நபர்கள் மீது மரணதண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here