Wednesday, May 15, 2024

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – தமிழக அரசு முடிவு!!

Must Read

கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

கொரோனா பரவல் அச்சம்:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மக்களை அச்சத்திற்குள்ளாகியது. இதனால் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், மக்களின் பொருளாதார நிலை கருதி மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தினை பின்பற்ற வழிமுறைகளை வெளியிட்டது. பள்ளிகளை திறக்க மாநிலங்களில் நிலவும் நிலையினை கருத்தில் கொண்டு அந்தந்த அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தாலும் பள்ளிகளுக்கான சேர்க்கை நடைபெற்று ஆன்லைன் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இன்னும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. பொது தேர்வுகளும் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. அதனால் பள்ளிகள் திறப்பு பற்றிய முடிவினை அரசு தள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தில் டிச.7 முதல் கல்லூரிகள் திறப்பு!!

கொரோனா பரவல் ஒரு அளவு சீரானதும் பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடுதலாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டாலும் கல்லூரிகளை திறக்க பல மாநிலங்கள் முடிவெடுத்துள்ளதால், கல்லூரிகள் வரும் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -