தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு டிச. 31 வரை நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!

1
cmo of tamilnadu
cmo of tamilnadu

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு ஆண்டு இறுதிவரை (டிசம்பர் 31) நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். இதில் கல்லூரிகள் திறப்பு, சென்னை மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய தளர்வுகள்:

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதுவரை 780,505 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 757,750 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 11,052 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் கடந்த 28ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளதால் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

palanisami attend video conference

அனைத்து மருத்துவ கல்லூரிகளும் டிசம்பர் 7ம் தேதி முதலும், இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதலும் வகுப்புகள் தொடங்கப்படும். கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை ஆகிய இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகளை திறந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். சுற்றுலா தலங்கள், பொருளாதார கண்காட்சி அரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 1 முதல் 31ம் தேதி வரை அரசியல், சமுதாய கூட்டங்கள் அதிகபட்சக 200 நபர்களுடன் அல்லது 50% இருக்கைகளுடன் நடத்திக் கொள்ளலாம். வெளிமாநில பயணிகளுக்கு இ பாஸ் நடைமுறை தொடரும்.

மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும். அதுமட்டுமின்றி மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி சர்வதேச விமான போக்குவரத்து ரத்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here