2020 இல் கடைசி சந்திர கிரகணம் – இந்தியாவில் தெரியுமா??

0

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று தான் நிகழ உள்ளது. ஏற்கனவே ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் 3 சந்திர கிரகணம் முடிந்துவிட்ட நிலையில், இன்று கடைசி சந்திர கிரகணமும் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சந்திர கிரகணம்

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வந்து அவை ஒரே நேர்கோட்டில் இருக்கும் பொழுது, பூமியின், நிழலானது சந்திரனின் மீது விழுந்து சந்திரனை மறைக்கும். இந்த நிகழ்வானது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த சந்திரகிரகணம் “பெனும்பிரல்” சந்திர கிரகணம் ஆகும். இது வழக்கமான சந்திர கிரகணங்களை விட அதிக நேரம் நீடிக்கும். இந்தியாவிலேயே 4 மணி வரை நீடிக்கும் என சொல்லப்படுகிறது. அனால் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், இந்தியாவில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தெரிய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம், ஐரோப்பா, ஆசியா,  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பசுபிக் மற்றும் அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் எனவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here