Thursday, May 9, 2024

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த திட்டம் – பயனர்கள் அதிர்ச்சி!!

Must Read

வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூடிய விரைவில் தங்களது திட்டங்களுக்கான விலையை உயர்த்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதன் பயனர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த இரு நிறுவனமும் தங்களது போட்டி நிறுவனமான ஜியோவின் ஒவ்வொரு நகர்வினையும் கவனித்து தான் முடிவுகளை எடுக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனம்:

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் தொலைத்தொடர்பு வசதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. அந்த வகையில் மிகவும் முக்கியமாக கருதப்படும் நிறுவனங்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன். ஜியோ இந்தியாவில் பல அதிரடியான ஆஃபர்களை அறிவித்து மக்களை தன் பக்கம் இழுத்தது. இதன் காரணமாக பல நிறுவனங்களும் அவர்களது யுக்திகளை பயன்படுத்தினர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

வோடபோன் இந்தியாவின் ஐடியா நிறுவனத்துடன் கைகோர்த்து தற்போது VI என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை செய்து கொண்டு வருகின்றது. இப்படியாக இருக்க இரு நிறுவனங்களும் பல வித இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக இரு நிறுவனங்களும் தங்களது திட்டங்களுக்கான கட்டணங்களை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உயர்த்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டண உயர்வு நிச்சயம்:

கட்டண உயர்வு 15% முதல் 20% வரை இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த உயர்வுகளுக்கு நிதி மீட்பு, வாடிக்கையாளர்களால் ஏற்படும் இழப்புகளை சரி செய்தல், சமநிலையினை தக்க வைத்து கொள்ளுதல் போன்ற காரணங்கள் உள்ளன. இது குறித்து VI நிறுவனத்தின் தலைவர் ரவீந்தர் தக்கர் கூறியதாவது, “முதல் நிறுவனமாக VI கட்டணங்களை உயர்த்துவதில் வெட்கம் கொள்ளாது. தற்போது பின்பற்றப்பட்டு வரும் கட்டண விகிதங்கள் மேலும் நீடிக்காது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபால் விட்டல் கூறியதாவது, “கட்டணங்களை உயர்த்துவதில் எங்கள் நிறுவனம் முதலாவதாக இருக்காது. ஆனாலும், இதே விலை கட்டணங்கள் நீடிக்கும் என்றும் கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார். ET அறிக்கையின்படி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் 14 மில்லியனுடன் ஒப்பிடும்போது, ஜியோ 7 மில்லியன் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. மறுபக்கம் VI நிறுவனம் 8 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -