சமந்தாவின் கல்லூரி பருவ புகைப்படம் இணையத்தில் வைரல் – அட நம்ம சம்முவா இது?? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. தற்போது வரை இவருக்கென்று ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். எப்பொழுதும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் சமந்தாவின் கல்லூரி போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா

மாடலிங் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் சமந்தா அக்கினேனி. திரையுலகில் தற்போது வரை ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக திகழ்பவர். மேலும் தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு நாயகனான நாகசைதன்யாவை காதலித்து 2017 இல் திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவரது தீவிர ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருந்தனர். திருமணம் ஆன பிறகு மார்க்கெட் குறையும் நாயகிகளை தான் பார்த்துள்ளோம். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படி இல்லை தொடர்ந்து தற்போது வரை முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

தற்போது வரை முன்னணி நாயகர்களுடனே ஜோடி சேர்ந்தும் வருகிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்திலும் சில வருடங்களாக நடித்து வருகிறார். தெறி, மெர்சல் என தமிழில் வெளியான படங்கள் செம ஹிட் அடித்தது. தெலுங்கிலும் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் சமந்தா.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் கமிட் ஆனதாகவும் பிறகு அதிலிருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது லாக்டவுன் சமயத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

உடற்பயிற்சி செய்யும் புகைப்படம், வீடியோ என பலவற்றை வெளியிட்டார். மேலும் பல கவர்ச்சிகரமான புகைப்படத்தையும் வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கூட அவரின் குழந்தை வயது புகைப்படம் வைரலானது. அதேபோல தற்போது சமந்தாவின் கல்லூரி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here